ஆறுமுக அவதார அரங்கா வாழ்க..
அறம் வளர்த்து வருகின்றசேமிக்க
ஞானியே ஏறுமுகம் (உயிர்நிலை)
உலகம் அடையவே எல்லா உயிர்க்கும்
அறம் செய்து.
பொருள் : தாய்க்கும் சக்திக்கும் ஒப்பான பசுவிற்கு மனமுவந்து தருமமிட்டு உணவளித்தால் இவ்வையகம் நல்ல சக்தியுடன் பலம் பெருகும்.
எங்களின் நோக்கம்
அருள்மிகு ஶ்ரீ சேவுகமூர்த்தி பெருமாள் கோயில் சுவாமிக்கு நாம் நேர்த்திக்கடனாக பசுக்களையும் காலை மாடுகளையும் கன்றுக் குட்டிகளாக நேர்ந்து விடுவது மரபு. அப்படி கோயிலுக்கென்று நேர்ந்து விடும் கன்றுகளையும் மாடுகளையும் முறையாக பராமரிக்க அமைக்கப்பட்ட அமைப்புதான் ஶ்ரீ சேவுகமூர்த்தி கோசாலா அறக்கட்டளை. இதன் முக்கிய சீரிய பணி, கன்றுகளையும் மாடுகளையும் ஆரோக்கியத்துடன் பாதுகாப்பதுடன் கோயிலையும் சுத்தமாக பாதுகாப்பதாகும்.
தற்போது சிறப்பு கவனம் தேவைப்படும் பசுக்களை பராமரிக்க, கோசாலையில் ஒருவர் முழுநேர சேவை செய்து வருகிறார். இதற்க்கு மாதம் ஐந்து ஆயிரம் ரூபாய் வரை கைஇருப்பு தேவைபடுகிறது.
கோசாலை, மாடுகளுக்கு தீவனம் சேமிக்கும் இடமாகவும் செயல்படுகிறது. சிறப்பு கவனம் தேவைப்படும் பசுக்களுக்கு சராசரியாக ஒரு மாதத்திற்கு பத்து ஆயிரம் ரூபாய் வரை கையிருப்பு தேவைப்படுகிறது.